
கடல் நீலம் Kadal Neelam
bij 1 winkel
Verwant
Streepjescode: 9798348385798
Alle aanbiedingen
- bol.comகடல் நீலம் Kadal NeelamNaar de winkel€ 4,98Op voorraad
We verdienen mogelijk commissie als je via deze link koopt. Wat jij betaalt verandert niet.
Over dit product
அடிப்படையில் இங்கு ஒவ்வொரு மனதும் அன்பு செய்து, அளவில்லா அன்பு கொண்டு வாழவே ஆசை கொள்கிறது. காதலாகி கசிந்துருகும் இறை பிரேமை முதல் ஈருடல் ஓருயிர் என இலக்கியம் சொல்லும் காதல் வாழ்வு வரை நெருக்கமும் ஆழ் பிணைப்புமே எவ்விரு உள்ளங்களுக்கு இடையேயும் பிரதானம். எனினும், ஒவ்வொரு உறவிலும் கண்ணுக்குப் புலப்படாத வரையறை உண்டு தானே? பெற்றவருக்கு, உடன் பிறந்தவர்களுக்கு, நண்பர்களுக்கு, அணுக்கர்களுக்கு, அலுவலகத் தோழர்களுக்கு என ஒவ்வொருவருக்கும் சில எல்லைக்கோடுகள் உள்ளன. நாமே தீட்டி வைத்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத கோடுகள். இவை எங்குத் தொடங்கி எங்கு முடிய வேண்டும் என்றோ, எந்தப் புள்ளியில் நிறுத்தலாம், எங்குத் தொடரலாம் என்றோ அவரவர் தவிர வேறு யார் தீர்மானிக்க இயலும்? 'கடல் நீலம்' இவ்வுறவு சிக்கல்கள் குறித்துப் பேசும் நாவல் தான். கதைக்கு ஏன் இப்பெயர், 'கடல் நீலம்' என்று? பள்ளியும் கல்லூரியும் தருகிற ஏட்டுப்படிப்பு தாண்டி, பார்த்து, கேட்டு, உணர்ந்து எனப் பிறந்ததில் இருந்து கற்றுக் கொண்டே இருக்கும் குழந்தையின் மனதில் பதியும் படிமங்கள் விவரிக்க முடியாத சித்திரங்களாக, பிரமைகளாக, அச்சங்களாக, அவற்றை எதிர்கொள்கிற திட்டங்களாக விரிவடைகின்றனவாம். உளவியலாளர்கள் சொல்வது. நாவலை வாசித்ததும் பெயர் காரணம் உங்களுக்கும் பொருத்தமாகத் தோன்றியதா என்று என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்நாவல் குறித்த தங்களின் எண்ணங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். வாசகர்கள் தங்களது ஆதரவுக்கும் மதிப்புமிகு விமர்சனங்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள் பல!
Omschrijving aangeleverd door bol.com.