Sanga Kaala Vallalgal
bij 1 winkel
Verwant
Streepjescode: 9788118104629
Alle aanbiedingen
- bol.comSanga Kaala VallalgalNaar de winkel€ 1,98Op voorraad
We verdienen mogelijk commissie als je via deze link koopt. Wat jij betaalt verandert niet.
Over dit product
'சங்க கால வள்ளல்கள்' என்னும் பெயருடன் வெளிவரும் இந்நூல், கடையெழு வள்ளல்களின் வரலாற்றை முறைப்படி அறிவிக்கும் ஒரு நூலாகும். இது பெரிதும் புறநானூற்று நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருத்தலின், இன்னோரன்ன வரலாறுகள் பலவற்றை அந்நூலினின்று மாணவர்கள் படித்தற்குத் துணைசெய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்னும் எண்ணங்கொண்டே இஃது எழுதப்பட்டுள்ளது. பிறமொழிச் சொற்கள் பெரிதும் கலவாது, செந்தமிழ் மொழிச் சொற்களையே துணையாகக்கொண்டு எழுதப்பட்டிருப்பதால், தனித் தமிழ் நடை எழுத விழையும் மாணவர்கட்கு இந்நூல் துணை செய்யும் என்பதும் என் துணிபு. திருவள்ளுவரையும் அவர் யாத்த திருக்குறள் பெரு நூலையும் எல்லா மொழியினரும், இனத்தவரும் சமயத்தவரும் பெரிதும் பாராட்டுதற்குரிய காரணங்கள் பலவற்றுள் ஒன்று, எல்லாச் செய்திகளையும் திருவள்ளுவர் நன்கு சிந்தித்து வரையறுத்துத் தம் நூலில் பாடி அமைத்திருத்தலேயாகும். அங்ஙனம் அமைத்த கருத்துக்களில் "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்பதும் ஒன்று. அஃதாவது உயிர் அடையவேண்டிய பேறாக இருப்பது தமக்மென வாழாது பிறர்க்கென வாழ்ந்து, இயல்வது கரவாது ஏற்றவர்க்கு இல்லையெனக் கூறாது ஈந்து, அங்ஙனம் ஈந்ததனால் இசைதோன்ற வாழ்வு நடாத்துதலே யாகும் என்பதாம். ஈதலையே தம் வாழ்வாகக் கருதி அவ்வாழ்வே தம் மறுமையிலும் தொடரவேண்டும் என்று விரும்புபவர்களும் பலர் நம் நாட்டில் இருந்திருக்கின்றனர். கன்னனது ஆவியோ நிலையில் கலங்கி இருந்தது. அவ்வாவி ஆக்கையின் அகத்ததோ, புறத்ததோ என்னும் நிலையில் இருந்தது. அந்நிலையிலும் அவன் கண்ணனுக்கு வேண்டியதை ஈந்து கன் இசையை நிலை நிறுத்தினான் என்பதைக் கேள்விப்படுகிறோம் அல்லவா?
Omschrijving aangeleverd door bol.com.